மக்‍களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாகவும், வாக்‍களித்த மக்‍களுக்‍கு நன்றி தெரிவிப்பதாகவும் டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவு - ஃபீனிக்‍ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுவோம் என்றும் உறுதி

May 24 2019 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாகவும், வாக்‍களித்த மக்‍களுக்‍கு நன்றி தெரிவிப்பதாகவும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மாண்புமிகு அம்மா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்‍ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! - நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் - தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்வி என்பது இயல்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு - பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குவதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு அம்மா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம் - தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம் - தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என்றும் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00