தேனி தொகுதியில் ஏற்கனவே சீல் உடைக்‍கப்பட்ட வாக்‍கு இயந்திரங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டதால் வேட்பாளர்கள் அதிர்ச்சி - முறையிட்டும் கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

May 24 2019 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக் ‍கழகத்திற்கு பதிவான வாக்‍குகளை இருட்டடிப்பு செய்யும் நோக்‍கில் அவை ஹேக்‍ செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வாக்‍குச்சாவடி முகவரின் ஓட்டுகூட கணக்‍கில் காட்டப்படாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் வெற்றியை தடுக்‍கும் நோக்‍கில் செயல்பட்டு வந்த எடப்பாடி அணியினர், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தில்லுமுல்லு நடவடிக்‍கையில் ஈடுபட்டனர். இதன் உச்சகட்டமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வாக்‍குகள், வாக்‍குப்பதிவு இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் ஹேக்‍ செய்யப்பட்டு மாயமாக்‍கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

நீலகிரி தொகுதியில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக வாக்‍குச்சாவடி முகவரின் வாக்‍குகூட கணக்‍கில் காட்டப்படாமல் மறைக்‍கப்பட்டிருந்ததாகவும், உதகை, கூடலூர், அவினாசி பகுதிகளில், 50-க்‍கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் கழக வேட்பாளர் திரு.ராமசாமி, தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யாவிடம் புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணன், தேர்தல் ஆணையத்தைக்‍ கண்டித்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெற்றுக்‍ கொண்டிருந்தபோது கணிசமான வாக்குகள் பெறுவோம் என நினைத்த கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணன், முதல் சுற்றில் இருந்தே அவருக்கு சொற்பமான வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்தார். ஒரு சில வாக்கு இயந்திரங்களில் அவருக்கு ஒன்று, பூஜ்ஜியம் என வாக்குகள் வந்தன. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஸ்ரீபெரும்புதூர் உட்பட தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு எதிராக செயல்படுவதாகக்‍ கூறி, திடீரென வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு, கையில் பதாகையுடன் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்றும், VVPAT இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டை சரி பார்க்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் கழகத்தினர் புகார் தெரிவித்தனர். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குலுக்கல் முறையில் ஐந்து வாக்குப்பெட்டிகளின் ஒப்புகைச் சீட்டை மட்டுமே சரிபார்க்க முடியும் என்று தெரிவித்து புகாரை பெறுவதற்கு மறுத்துவிட்டனர். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு. எஸ் செந்தமிழன், இந்த முறைகேட்டை, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00