கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு போராட்டம் : அரசு ஊழியர்கள், மீனவர்கள் - பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

Jun 12 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோரிக்‍கைகளை வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியர்கள், மீனவர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஆந்திராவை போல பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்‍கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பள்ளக்காட்டுப்புதூர் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கத்திற்கு பொறுப்பாளர் நியமிக்கப்படாமல் சங்கம் செயலிழந்துள்ளதால், புதிய பொறுப்பாளரை நியமனம் செய்யக்‍கோரி, மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை, சங்க உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுப்பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டமிட்டு, தீவுகளைச் சுற்றி மிதவை வேலிகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்‍கப்படும் என்றும், மீன்பிடி தொழிலை தடுக்‍கும் விதத்தில் மிதவை வேலி அமைத்ததை கண்டித்தும், நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் எஸ்.வலையபட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது குடும்பத்தினர், ஒரு குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் பிடிக்க சென்றபோது தகாத வார்த்தைகளால் திட்டி பெண்களை இழிவுபடுத்துவதாகவும், மேலும் அடித்து காயம் ஏற்படுத்தி சாதி பெயரை குறிப்பிட்டு இழிவு படுத்துவதாகவும் பாதிக்‍கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்‍கை எடுக்‍காததால், குறிப்பிட்ட சமூகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே ஊர் மக்களுக்கும், மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள புதிதாக திறக்கபட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை உடனே மூட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 500 மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறையின் துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான திரு சுப்பிரமணியனை, பழிவாங்கும் நோக்கத்தோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் கண்டன பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்ட அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00