ராமநாதபுரத்தில் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக திடுக்‍கிடும் புகார் - போக்‍குவரத்துக்‍கழக அதிகாரிகள் இருவரின் தொலைபேசி உரையாடல் அம்பலம்

Jun 12 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு போக்குவரத்து கழக அம்மா வாட்டர் விற்பனையில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. போக்‍குவரத்துக்‍ கழக மேலாளர் மற்றும் கேஷியர் இடையே நடைபெற்ற இதுதொடர்பான தொலைபேசி உரையாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரசு போக்குவரத்து கழகத்தின் ராமநாதபுரம் கிளைக்கு தினந்தோறும் கும்மிடிப்பூண்டியில் இருந்து 700 அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பாட்டில்கள் அனைத்தும், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள, அம்மா வாட்டர் விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறன. கடந்த சில மாதங்களாக அம்மா வாட்டர் கேன்கள் விற்பனை தொகையை, வங்கியில் செலுத்தாமல் அரசு போக்குவரத்து கழக கிளையின் கேஷியர் ராசாத்தி கையாடல் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் யார் யாருக்‍கு இந்த மோசடியில் தொடர்புள்ளது என்பது குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், போக்குவரத்து கழக கிளை மேலாளர் பத்மகுமார் மற்றும் கேஷியர் ராசாத்திக்‍கும் இடையிலான, தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருக்‍கலாம் என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00