மதுரையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொகுதியில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பொதுமக்‍கள் கழிவறை நீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

Jun 12 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொகுதியில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், கழிவறைக்கு பயன்படுத்தப்படும் நீரை குடிநீராக பயன்படுத்தும் அவலமும், உப்பு தண்ணீருக்‍கே, பொதுமக்‍கள் பல கிலோ மீட்டர் சென்று தேடி அலையும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஆர்பி.உதயகுமாரின் தொகுதியான மதுரை திருமங்கலம் தொகுதியில், கடந்த ஒரு வருட காலமாக, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என வேதனையுடன் தெரிவித்துக்கும் தொகுதி மக்கள், அன்றாடம் உபயோகிக்கும் உப்பு தண்ணீருக்‍கே 3 கிலோமீட்டர் தூரம் சென்று எடுத்துவரவேண்டிய அவலம் நீடிப்பதாக வேதனை தெரிவிக்‍கின்றனர்.

கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள சின்ன உலகாணி, பெரிய உலகாணி, கூடக்கோவில், வடகரைபுதூர், மேலக்கோட்டை உள்ளிட்ட கிராமப்புறங்களில் குடிநீரைக்‍ குடமொன்றுக்கு 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கிராமங்களில் பல மணி நேரம் அறிவிக்‍கப்படாத மின்தடை ஏற்படுவதாகவும் பொதுமக்‍கள் தெரிவிக்‍கின்றனர். மேலும், கிராமங்களில் உள்ள பொது குளியல் அறைகளிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் பெண்கள் வேதனை தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3261.00 Rs. 3419.00
மும்பை Rs. 3466.00 Rs. 3366.00
டெல்லி Rs. 3456.00 Rs. 3336.00
கொல்கத்தா Rs. 3502.00 Rs. 3362.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00