இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக ஐக்‍கிய நாடுகள் அதிர்ச்சித் தகவல் - குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

Jun 12 2019 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலகில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜுன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமை என பிரகடனம் செய்து, குழந்தைகளின் உடல், மனம், சமூகம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் அவர்களை சுயலாபத்திற்காக கூலிவேலைகளில் ஈடுபடுத்துவது குற்றம் என ஐக்கிய நாடுகளும் இந்திய சட்டங்களும் வலியுறுத்துகின்றன. ஆனாலும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி பெரம்பலூரில் பேரணி நடைபெற்றது. பாலக்கரை பகுதியில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை இட்டவாறும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நெல்லையில் நடைபெற்றது. நாட்டின் எந்த ஒரு இடத்திலும் குழந்தைகளை தொழிலாளர்களாக பணியமர்த்த கூடாது - அனைத்து குழந்தைகளும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதே இந்த ஸ்கேட்டிங் பேரணியின் நோக்‍கமாகும். இப்பேரணியை மாவட்ட வருவாய் துறை அதிகாரி துவக்கி வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3261.00 Rs. 3419.00
மும்பை Rs. 3466.00 Rs. 3366.00
டெல்லி Rs. 3456.00 Rs. 3336.00
கொல்கத்தா Rs. 3502.00 Rs. 3362.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00