விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமமுக சார்பில் இல்லம் தோறும் இலவச மினரல் வாட்டர்

Jun 20 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் நகராட்சிக்‍கு உட்பட்ட பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இல்லம் தோறும் இலவச மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.

விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீர் சாக்கடை கலந்து சுகாதரமற்ற முறையில் வருவதால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று விருதுநகர் நகராட்சி 7வது வார்டு கம்மாபட்டி தெருவில் உள்ள பொதுமக்களுக்கு மினரல் வாட்டர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. குடிதண்ணீரை வரிசையாக நின்று குடங்கள் மூலம் பெற்றுக்‍கொண்ட பெண்கள், கழகத்தினருக்‍கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. ரவி கந்தசாமி சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட தலைவர் திரு. ஜாகிர் உசேன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00