100 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடாக பயன்படுத்தப்பட்ட நிலம் - வருவாய்த்துறை பதிவேட்டில் வாய்க்கால் என தவறாக பதிவு : சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணின் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு

Jun 20 2019 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரு கிராமத்தில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடாக பயன்படுத்தப்பட்டு வந்த இடம், வருவாய்த்துறை பதிவேட்டில் வாய்க்கால் என தவறாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், அந்த சுடுகாட்டுக்கு இன்று கொண்டு செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பணப்பாக்கத்தில், ஒரு பகுதி, 1915-ம் ஆண்டில் இருந்து சுடுகாடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடத்தை 1981-ம் ஆண்டு வருவாய்த்துறை பதிவேட்டில், அதிகாரிகள் வாய்க்கால் என தவறுதலாக பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தோரை, அந்த சுடுகாட்டில் தொடர்ந்து அடக்கம் செய்துவந்த பணப்பாக்கம் கிராம மக்கள், வருவாய்த்துறை பதிவேட்டில் மீண்டும் அந்த இடத்தை சுடுகாடு எனப் பதிவு செய்ய கோரிக்கை விடுத்ததை அடுத்து, அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர், வாய்க்கால் எனப் பதிவு செய்யப்பட்டிருந்ததை சுடுகாடு என்று திருத்தம் செய்தார்.

இந்நிலையில், பணப்பாக்கம் பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர், 2014-ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியை, மாவட்ட ஆட்சியர் மீண்டும் வாய்க்கால் என அறிவித்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், அந்த இடம் சுடுகாடா? வாய்க்காலா? என்ற இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்த சரோஜா என்பவரது உடலை அடக்கம் செய்வதற்காக, அவரது உறவினர்கள் அந்த சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றபோது, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால், பெரும் துயரத்திற்கு ஆளான உறவினர்கள், அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சரோஜாவின் உடலை அடக்கம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00