மதுரையில் போலீசார் தாக்‍கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவலர் பணியிடை நீக்‍கம் - கோரிக்‍கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பாதிக்‍கப்பட்டவர்கள் திட்டவட்டம்

Jun 21 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் காவல்துறையினர் தாக்‍கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவலர் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், தங்களது கோரிக்‍கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பாதிக்‍கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை சிம்மக்கல் அருகே கீழ்பாலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்‍கர வாகனத்தில் வந்த எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த விவேகானந்தகுமார் மற்றும் சரவணகுமார் ஆகியோரை சோதனைக்‍காக, அவர்களது வாகனத்தை நிறுத்தி தாக்‍கினர். இதில் படுகாயமடைந்த விவேகானந்தகுமார், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக்‍கோரி விவேகானந்தகுமாரின் உறவினர்கள், தொடர்ந்து 5-வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவேகானந்தகுமாரின் உடற்கூராய்வு முடிவுற்ற நிலையில் போலிசார் மீது வழக்குப்பதிவு செய்யாத காரணத்தினால் உடலை வாங்காமல் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் விவேகானந்தகுமாரின் மனைவியும் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து மதுரை மாநகர் காவல்துறை ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்ததை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திலகர் திடல் காவல் நிலையத்தின் முதன்மை காவலர் ரமேஷ் பாபு என்பவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் நீடிக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00