அ.ம.மு.க.வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் நீக்‍கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவிப்பு - கழகத்திலிருந்து யாரையும் நீக்‍க அச்சமோ தயக்‍கமோ கிடையாது என்றும் திட்டவட்டம்

Jun 27 2019 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் நீக்‍கப்படுவார் என்றும், கழகத்திலிருந்து யாரையும் நீக்‍க அச்சமோ தயக்‍கமோ கிடையாது என்றும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள திரு.டிடிவி தினகரன் இல்லத்தில், அ.ம.மு.க.வின் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கழகத்தின் முக்‍கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இக்‍கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சுகள், செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே பலமுறை புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் அவரை கண்டித்திருப்பதாகவும் கூறினார். எனவே அவர் விரைவில் நீக்‍கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்‍கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்‍கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்‍களிப்போம் என்றும் திரு.டிடிவி தினகரன் கூறினார்.

​ தேனி மாவட்டத்தின் புதிய கழக செயலாளரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00