தமிழகத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு : எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Jun 27 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் களைய வலியுறுத்தி, எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முசிறி தாலுகா அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தரப்பட்டியில், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் போதிய குடிநீர் வழங்கிட, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரில் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அய்யம்பாளையத்திலிருந்து, சேந்தமாங்குடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சாலை அமைக்கும் பணிகளையும் தடுத்துநிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, முசிறி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துறையூர் பச்சைமலை பகுதிவாழ் மக்கள், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி, எடப்பாடி அரசை கண்டித்து துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் ஊராட்சிக்குபட்ட பகுதிகளில், மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கபட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர், இதனால் ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கபடாததைக் கண்டித்து, ஆத்திரமடைந்த பெண்கள், ஆரணி - வேலூர் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபக்கமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஆரணி போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகு, பெண்கள் கலைந்து சென்றனர்.

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00