கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை கொள்ளை : கொள்ளையன் விட்டுச் சென்ற வாகனம், செல்போன் பறிமுதல்

Jun 27 2019 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேநீர்க்‍ கடையில் நின்றுகொண்டிருந்த பெண்ணை தாக்‍கி 10 சவரன் நகையை பைக்‍கில் வந்த கொள்ளையன் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரல்வாய்மொழி அருகே அனந்தபத்மநாபபுரம் கிராமத்தில் ராஜலிங்கம் - புஷ்பம் தம்பதியர் தேநீர்க்‍கடை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை நான்கரை மணியளவில் இருசக்‍கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் சிகரெட் கேட்க, அதை எடுப்பதற்காக புஷ்பம் திரும்பியபோது, அவரை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்‍கொண்டு தப்பி ஓடினான். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் கொள்ளையன் விட்டுச் சென்ற வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று தக்கலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம் கார்டுகளுடன் நின்ற குப்பகோணத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். புலியூர்குறிச்சி பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ஒருவர் ஏராளமான ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையத்திற்கு வெளியே காத்திருந்த வாடிக்கையாளர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் குப்பகோணம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் என்பதும், ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க முயல்வதற்கு முன் தக்கலையில் உள்ள பேக்கரி கடையில் புகுந்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் பேக்கரியில் திருடிய பணத்தையும் கைப்பற்றினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00