பால் உற்பத்தியாளர்களுக்‍காக பால் விலை உயர்த்தப்படும் - சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு

Jul 5 2019 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலின் விலை உயர்த்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக்‍ கோரிக்‍கையின் மீதான விவாதத்தின்போது, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென தி.மு.க. தரப்பில் கேட்டுக்‍கொள்ளப்பட்டது.

உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தினால் நுகர்வோருக்கான பால்விலையும் உயரும். அதற்கு திமுக சம்மதித்தால் தங்களுக்கும் சம்மதம் என முதலமைச்சர் தெரிவித்தார். பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்‍கான கொள்முதல் விலையும், நுகர்வோருக்‍கான விலையும் உயர்த்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

இதனிடையே, விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தொழில்துறை அமைச்சர் திரு. எம்.சி.சம்பத், சேலம் உருக்காலையை ஒருபோதும் தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழக அரசு அனுமதிக்காது என கூறினார். வேலூர் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மின்துறையில் வேலூருக்‍கான புதிய அறிவிப்புகள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திரு. தங்கமணி, இந்த அறிவிப்புகள் அனைத்தும் வேலூர் தொகுதியில் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00