திருவாரூரில் அமைச்சர் காமராஜின் ஆதரவாளர், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்‍குதல் - வாகனத்தையும் அடித்து நொறுக்‍கி அராஜகம்

Jul 8 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூரில் அமைச்சர் காமராஜின் ஆதரவாளர், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் மீது தாக்‍குதல் நடத்தியதோடு, அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்‍கி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்‍காவுக்‍கு உட்பட்ட அதங்குடி கிராமத்தைச்​சேர்ந்த அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக அம்மா பேரவை நகரச் செயலாளர் திரு. கிட்டா சரவணன், ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். அமைச்சர் காமராஜின் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவுக்‍கு வருமாறு கழக நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்து கடந்த ஒரு மாதகாலமாக அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அமைச்சரின் ஆதரவாளர் கழக நிர்வாகியின் ஜேசிபி வாகனத்தை அடித்து நொறுக்‍கியதோடு, கழக நிர்வாகிகள் விஜயராகவன் மற்றும் ஜேசிபி ஆப்ரேட்டர் ஐயப்பன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்‍குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்‍குதலில் படுகாயமடைந்த ஐயப்பன், திருவாரூர் அரசு மருத்துவக்‍ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆளுங்கட்சியின் தலையீட்டால் கழக நிர்வாகி விஜயராகவனுக்‍கு, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில், மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்‍க மறுத்ததால், மருத்துவமனை வாயிலில் நெஞ்சுவலியால் அவதியுற்று வருகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காமல், ஆளுங்கட்சிக்‍கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00