கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Jul 19 2019 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், தே.மு.தி.க, விடுதலைசிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலர், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தில் இணைந்தனர்.

தே.மு.தி.க.வை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியச் செயலாளர் திரு.பலராமன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த பலர், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.கணேசகுமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.மாதேவா, தருமபுரி மாவட்டச் செயலாளர் திரு.T.K.ராஜேந்திரன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் அரூர் திரு.ஆர்.ஆர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியக்‍ கழகச் செயலாளர் திரு.ராகவன், சூளகிரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் திரு.பழனி தலைமையில், அக்கட்சியை சேர்ந்த பலர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.கணேசகுமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.மாதேவா, தருமபுரி மாவட்ட செயலாளர் திரு.T.K.ராஜேந்திரன், கழக எம்.​ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் திரு.அரூர் ஆர்.ஆர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியக்‍ கழகச் செயலாளர் திரு. ராகவன், சூளகிரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பெண்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பலர், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தில் இணைந்தனர். அப்போது, கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியம் வடமலம்பட்டி பெண்கள் இயற்கை வள மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த பலர், திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்ட ஒன்றியக்‍ கழக, சார்பு அணி நிர்வாகிகள் பலர், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது, கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00