மருத்துவ மாணவர்களுக்‍கான தேசிய நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

Jul 19 2019 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ மாணவர்களுக்‍கான தேசிய நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மருத்துவ இளங்கலை படிக்‍கும் மாணவர்கள் நெக்‍ஸ்ட் எனப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே மருத்துவராக சேவையாற்ற முடியும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நெக்‍ஸ்ட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்‍கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் நெக்‍ஸ்ட் தேர்வு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், இதனை தமிழக அரசு ஏற்கக்‍கூடாது என்றும் வலியுறுத்தினார். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், நெக்‍ஸ்ட் தேர்வுக்‍கு எதிராக தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வருவதாகக்‍ கூறினார்.

ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்‍கல் செய்யப்பட்டது. முன்னதாக, கேள்வி ஒன்றுக்‍கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் திரு.காமராஜ், விவசாயிகளின் தேவையை அறிந்து, நேரடி நெல் கொள்முதல் திறக்‍கப்படும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00