அவதூறு வழக்கில் நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் தவறான தகவல் - தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலம்

Apr 30 2013 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், தவறான தகவலை தெரிவித்து ஆஜராகாமல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஏமாற்றியிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில், விஜயகாந்த் மீது அரசு குற்றவியல் வழக்கறிஞர் திரு.ஞானசேகர் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாமல் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் பங்கேற்க வேண்டியிருப்பதால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் தகவல் அலுவலகம் மற்றும் சார்புச் செயலாளரிடம், அரசு வழக்கறிஞர் திரு.ஞானசேகர் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுவரை விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்திற்கு தவறான தகவலை கொடுத்து அவர் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் திரு.ஞானசேகர், அரசின் அனுமதி பெற்று விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருப்பதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00