தமிழக அரசின் புதிய தொழில்கொள்கை மூலம், 20 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு - தொழில்துறையில் புதிய சகாப்தம் படைத்து, உற்பத்தித் துறையில் உலகின் மிகப்பெரிய மையமாக தமிழகம் உருவாகும் : முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி

Feb 22 2014 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மூலம், 20 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், தொழில் துறையில் புதிய சகாப்தம் படைத்து, உற்பத்தித் துறையில் உலகின் மிகப்பெரிய மையமாக தமிழகம் உருவாகும் என்றும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 பகுதி-2", தமிழ்நாடு தொழில்கொள்கை 2014, தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் கொள்கை 2014, தமிழ்நாடு உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியவற்றை வெளியிட்டு, விழாப்பேருரை ஆற்றினார். 2011-ம் ஆண்டு, தமிழகத்தில் 3-வது முறையாக தமது அரசு பதவியேற்றதிலிருந்து, "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ல்" குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை எய்த தாம் அயராது பாடுபட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில், தமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டார். தமிழகத்தில் மின்னணு தொழில்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், மின்னணு வன்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தமிழக மக்கள் உயர்தரமான உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் ஆகியவற்றைப் பெற்று திருப்திகரமான வாழ்க்கையை நடத்தும் வகையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்கும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00