தென்னிந்திய அளவில் சிறந்த தேயிலை உற்பத்தி - கோடநாடு தேயிலை தொழிற்சாலைக்கு கோல்டன் லீஃப் விருதுகள் வழங்கி கவுரவம்

Sep 10 2014 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னிந்திய அளவில் சிறந்த தேயிலை தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கான, மொத்தமுள்ள மத்திய அரசின் 4 விருதுகளில், 3 'கோல்டன் லீஃப்' விருதுகளை கோத்தகிரி கோடநாடு தேயிலை தொழிற்சாலை பெற்றுள்ளது. இந்த விருதுகளை, நீலகிரியில் நடைபெற்ற 121-வது தேயிலை உற்பத்தியாளர்கள் மாநாட்டில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் செயலாளர் வழங்கினார்.

தென்னிந்திய மலைத்தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களுக்கான 121-வது மாநாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்தியாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். தென்னிந்திய அளவில் சிறந்த தேயிலைத் தூள் உற்பத்தி செய்யும் தேயிலை தொழிற்சாலைகளுக்கான 'கோல்டன் லீஃப்' எனப்படும் தங்க தேயிலைத் தூளுக்கான சிறந்த ஆர்த்தோடக்ஸ் விருதுகள் 4-ல் மூன்று கோல்டன் லீஃப் விருதுகளை கோத்தகிரி கோடநாடு தேயிலை தொழிற்சாலை பெற்றுள்ளது. இந்த விருதுகளை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் செயலாளர் திரு. ரஜினி ரஞ்சன் ரேஷ்மி வழங்கினார். இந்த மாநாட்டில், தேயிலை, ரப்பர் மற்றும் காஃபி விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00