மணமான பெண் இறந்தால், அவரது தாய் - தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Jan 14 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருமணமான பெண் உயரிழந்தால், அவரது தாய், தந்தை சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிருஷ்ணா, விஜய நாகலட்சுமி தம்பதிக்‍கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு விஜய நாகலட்சுமி உயிரிழந்த நிலையில், அவரது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில், அவரின் தாயின் பெயர் சேர்க்கப்பட்டது.

மாமியாரின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், அமைந்தகரை வட்டாட்சியருக்கும் கிருஷ்ணா மனு அனுப்பினார். மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்‍கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி திரு. சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்து வாரிசு உரிமை சட்டப்படி, திருமணம் ஆன ஆண் உயிரிழந்தால், அவரின் மனைவி, குழந்தை மட்டுமல்லாமல், அவரது தாயாரும் சட்டப்பூர்வ வாரிசாக கருதப்படுவார் என தெரிவிக்‍கப்பட்டது. அதுவே திருமணமான பெண் உயிரிழந்தால், அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டபூர்வ வாரிசுகள் என்றும், இறந்த பெண்ணின் தாய்-தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது என்றும் விளக்‍கம் அளிக்‍கப்பட்டது.

எனவே, விஜய நாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்த நீதிமன்றம், அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00