நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணப்படும் வழக்குகள் : மனுதாரரின் கட்டணத்தை திரும்ப வழங்க பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jan 14 2020 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காணப்படும் வழக்குகளை வாபஸ் பெறும்போது, மனுதாரர் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க, பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணப் பிரச்சினை தொடர்பாக சக்தி பைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக எம்.சி.சுப்ரமணியம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டதால், வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதித்தது. வழக்கு தொடர்பாக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி பதிவுத்துறையை அணுகி நீதிமன்ற கட்டணத்தை திரும்ப தரக்கோரியபோது, வாபஸ் பெறப்பட்ட வழக்கிற்கு கட்டணத்தை திரும்பத்தர விதிகள் ஏதும் இல்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி எம்.சி.சுப்ரமணியம் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, லோக் அதாலத், மத்தியஸ்தம், சமரச தீர்வு மையம் ஆகியவற்றின் மூலம் வழக்கில் தீர்வு காணும்போது, முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க உத்தரவிட்டார். நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதனை ஊக்குவிக்க நீதிமன்ற கட்டணங்கள் திரும்பி வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00