தஞ்சாவூரில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jan 27 2020 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சாவூரில் இன்று கழக நிர்வாகிகள் சந்தித்தனர்.

தஞ்சாவூரில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி. தினகரனை மன்னார்குடி மேற்கு ஒன்றிய கழக இணைச் செயலாளர் திரு.எம்.பன்னீர்செல்வம் சந்தித்து தனது மகள் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.காமராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.பூண்டி பக்கிரிசாமி தனது இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு திரு.டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.

திரு.டிடிவி தினகரனை, தஞ்சை மாநகர் மாவட்ட விவசாய அணிச் செயலாளர் அகரபேட்டை திரு.மோ.சேகர் சந்தித்து, தனது இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

மதுரை வடக்கு மாவட்டம் 81வது வட்டக்‍ கழக செயலாளர் திரு.மோகன் தனது திருமண நாளை முன்னிட்டு திரு.டிடிவி தினகரனை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திரு. டிடிவி தினகரனை, தஞ்சை தெற்கு மாவட்டம் திருவோணம் ஒன்றிய கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.N.S.T. நடேஷ் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.இளையராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் மத்திய ஒன்றிய கழக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.எம்.மோகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.ரவி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து, தனது மகன் திருமண விழா அழைப்பிதழை வழங்கினார். அப்போது மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.ராஜ்குமார், மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு இணை செயலாளர் திரு. அஜித் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வுகளின்போது, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. ரெங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ராஜேஸ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. மா.சேகர், திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.எஸ்.காமராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00