நெல் அறுவடைக்கு அறிமுகமாகியுள்ள கையடக்க இயந்திரம் - நேரம், செலவு மிச்சமாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி

Jan 28 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெற்பயிரை அறுவடை செய்ய பயன்படும் வகையில் அறிமுகமாகியுள்ள கையடக்க இயந்திரம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, மேல வயலூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைந்த சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு வந்தது. மேலும், கனரக இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் செலவு அதிகமாவதுடன் இயந்திரமும் அடிக்கடி பழுதாகிறது. இதற்கு மாற்றாக சந்தையில் அறிமுகமாகியுள்ள கையடக்க அறுவடை இயந்திரம் விவசாயிகளை கவர்ந்துள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதால் செலவு மற்றும் நேரம் குறைவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது 50 சதவீத அரசு மாணியத்தில் இந்த இயந்திரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 100 சதவீத மானியத்தில் சிறு- குறு விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00