ஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை

Feb 9 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அருகே, ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர்.

தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் "சதிர் 10,000" என்ற தலைப்பில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் வகையில், தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு நடனமாடி, பார்வையாளர்களை கவர்ந்தனர்.

கின்னஸ் நடுவர் சோஃபியா இந்த நிகழ்ச்சியின் பார்வையாளராக செயல்பட்டார். இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை இயக்குநர் திருமதி. அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் லூயிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழை கின்னஸ் நடுவர் சோஃபியா வழங்கினார்.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சிதம்பரத்தில், 7 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தியதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00