தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் 57 ஆயிரம் ரூபாய் கடனை தமிழக அரசு சுமத்தி உள்ளது - பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் கருத்து

Feb 14 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக பட்ஜெட் தெளிவான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாமல், காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழக அரசின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திறமையற்ற நிர்வாகத்திற்கு இந்த பட்ஜெட் ஒரு எடுத்துக்‍காட்டு என குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலை மீதும் 57 ஆயிரம் ரூபாய் கடனை தமிழக அரசு சுமத்தி உள்ளதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார். அடையாறு, கூவம் ஆறுகளை மேம்படுத்த கடந்த பட்ஜெட்டில் ஆயிரத்து 160 கோடி ரூபாய் ஒதுக்‍கப்பட்டதாகவும், ஆனால் என்னென்ன பணிகள் நடைபெற்றன? என்பது தெரியாத நிலையில், தற்போது மேலும் 5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்‍கப்பட்டிருப்பதை சுட்டிக்‍காட்டிய கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், செயல்திட்டங்கள் எதுவும் இல்லாத, காற்றில் வரைந்த ஓவியம் போல தமிழக பட்ஜெட் உள்ளதாக விமர்சித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், மதத்தின் அடிப்படையில் அமையக்‍ கூடாது எனவும், எல்லா மதங்களையும் மத்திய அரசு சமமாக பாவிக்‍க வேண்டும் எனவும் திரு. டிடிவி தினகரன் கேட்டுக்‍ கொண்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை ஆதரிப்போம் என்றும், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

இதனிடையே எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சின்னம்மா பணியாற்றுவார் என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00