சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் வழக்‍கில் உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவுக்‍கு உச்சநீதிமன்றம் தடை - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பதவியேற்க இடைக்‍கால தடை விதித்து உத்தரவு

Feb 14 2020 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் வெற்றி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்‍கில், உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவுக்‍கு இடைக்‍கால தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

சிவகங்கை சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில், காங்கிரசின் தேவி வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்‍கப்பட்டது. பின்னர், அதிமுக-வின் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்‍கப்பட்டது. இருவருக்‍கும் தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கிய நிலையில், பிரியதர்ஷினியின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தேவி வழக்‍கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காங்கிரசைச் சேர்ந்த தேவியின் வெற்றி செல்லும் என்றும், அதிமுக-வைச் சேர்ந்த பிரியதர்ஷினியின் வெற்றி செல்லாது என்றும் தெரிவித்தது. இதனை எதிர்த்து, அதிமுக பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்‍கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்‍கால தடை விதித்தது. மறு உத்தரவு பிறப்பிக்‍கும் வரை, சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக, காங்கிரசின் தேவியோ, அதிமுக-வின் பிரியதர்ஷினியோ பதவியேற்கக்‍ கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00