நாகர்கோவிலில் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் ஈரானியர்கள் இருவர் கைது - புழல் சிறையில் அடைப்பு

Feb 14 2020 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் ஈரானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கேரளா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை வாங்குவதுபோல் வியாபாரிகளின் கவனத்தை திசை திருப்பி, கடையில் உள்ள ஆயிரக்கணக்கான ரூபாயை நூதன முறையில் திருடி வந்துள்ளனர். ஆசாரிபள்ளத்தில் நேற்று முன் தினம் டேவிட் என்பவரிடம் இருவரும் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வாங்கிச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த டேவிட், பணத்தை எண்ணிப்பார்த்தபோது 10 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில், காவல்துறைக்‍கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்ற காரை அடையாளமாகக்‍ கொண்டு போலீசார் இருவரையும் பிடித்தனர். விசாரணையில் இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த ரிஸா, மிசாம் என்றும், அவர்கள் சகோதரர்கள் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்னர் பாதுகாப்பு நலன் கருதி சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00