சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி : 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது - காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து நள்ளிரவில் நடந்த மறியலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Feb 15 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று மாலை முதல் இரவு வரை போராட்டம் நீடித்ததை தொடர்ந்து, போலீசார், தடியடி நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

காவல்துறையினரின் தாக்குதல் செய்தி பரவியதை தொடர்ந்து, சென்னையில் அண்ணா சாலை, அசோக் நகர், ஆலந்தூர், ஐஸ்ஹவுஸ், எழும்பூர், அமைந்தகரை உள்ளிட்ட பல இடங்களில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல மணி நேரமாக போராட்டம் நீடித்ததை தொடர்ந்து, காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00