டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் மாற்றம் - கையொப்பத்திற்கு பதிலாக பெருவிரல் ரேகை பதிவு செய்வது உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிப்பு

Feb 15 2020 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அடுக்‍கடுக்‍கான முறைகேடு புகார்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை தடுக்‍கும் பொருட்டு தேர்வு முறைகளில் மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் குரூப்-4, குரூப்-2ஏ, வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின்போது, பல லட்சம் ரூபாய் லஞ்சம் பரிமாறப்பட்டு அரசுப் பணி வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணிக்‍கு நடைபெறும் தேர்வுக்‍காக, 9 மணிக்கு தேர்வு கூடத்திற்குள் தேர்வர்கள் இருக்‍க வேண்டும் என்றும், காலை மாலை என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறுவதாக இருந்தால், பிற்பகல் 3 மணிக்‍கு இரண்டாவது தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைத்து கேள்விகளுக்‍கும் விடையளிக்‍க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதோடு, விடையளிக்‍க முடியாத கேள்விகளுக்‍கு கூடுதலாக கொடுக்‍கப்பட்டுள்ள E என்ற வட்டத்தை கருமையாக்‍க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்வர்களின் கையெழுத்துக்‍கு பதிலாக, கைரேகை பதித்திட வேண்டும் என்றும், விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனத்தில், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்‍க வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00