கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்‍கு மத்தியில் 14 சீனர்களுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த‍ கப்பல் - சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்

Feb 16 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவிலிருந்து, 14 ஊழியர்களுடன், தூத்துக்குடி வந்த சரக்குக் கப்பல், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு அரசு திணறிவரும் நிலையில், சீனாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பனாமா நாட்டின் சரக்குக் கப்பல் ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படாததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.

கடந்த 11-ம் தேதி, மத்திய கப்பல்துறை இயக்‍குநர் திரு. அரவிந்த் சவுத்ரி, இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், சீனா சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ எந்த துறைமுகத்திலும் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பனாமா நாட்டின் சரக்குக் கப்பலில் வந்த மாலுமிகள் உள்ளிட்ட ஊழியர்கள் குறித்த எந்தத் தகவலையும் துறைமுக அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்நிலையில், அந்தக் கப்பல், சிங்கப்பூருக்கு திருப்பியனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00