இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்தில் பதற்றமான சூழல் : சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆலோசனை

Feb 16 2020 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், கடந்த வெள்ளிக்‍கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இஸ்லாமியர்களின் போராட்டம் 3-வது நாளாக இன்று நீடிக்‍கிறது. கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., உள்துறை ஐ.ஜி., சென்னை காவல் ஆணையர் ஆகியோர் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 50 நிமிடங்களுக்‍கும்மேல் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00