குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, வரும் 23-ம் தேதிமுதல் நாடு முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவிப்பு

Feb 16 2020 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 23-ம் தேதிமுதல், விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தேச ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், திரு. சீதாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பெரும்பாலான ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். நாட்டில் வாழும் அனைத்துப் பழங்குடியினரும், அரசு கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை உருவானால், அவர்கள் குடியுரிமையை இழக்கும் ஆபத்து ஏற்படும் எனக் குறிப்பிட்டார். கேரளா, மேற்குவங்கம், பீஹார், புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநில சட்டப்பேரவைகளில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை திரு. சீதாரம் யெச்சூரி சுட்டிக் காட்டினார். வரும் 23-ம் தேதி முதல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி, இந்த சட்டத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து, வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00