திரைப்படத்துறையில் கடைநிலை ஊழியர்களுக்‍கு பாதுகாப்பு இல்லாதது அவமானத்திற்குரியது - ஒருகோடி ரூபாய் நிதிஉதவி வழங்குவதாகவும் நடிகர் கமல்ஹாசன் பேட்டி

Feb 20 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திரைப்படத்துறையில் கடைநிலை ஊழியர்களுக்‍கும் பாதுகாப்பு இல்லாதது அவமானத்திற்குரியது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் முறிந்து விழுந்ததில் உதவி இயக்‍குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்‍கம் அரசு மருத்துவனையில் வைக்‍கப்பட்டுள்ளன. மேலும் 5 பேருக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடிகர் கமல்ஹசான் மருத்துவமனைக்‍குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்‍கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திரைப்படத்துறையில் கடைநிலை ஊழியர்களுக்‍கு பாதுகாப்பு இல்லாதது அவமானத்திற்குரியது என தெரிவித்தார். மேலும் விபத்தில் இருந்து நூலிழையில் தான் உயிர்தப்பியதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்படத்துறையில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் பார்த்துக்‍கொள்ள வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00