சரியான திருத்தங்களுடன், பாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டல புதிய மசோதாவை கொண்டு வர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Feb 20 2020 9:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசு கொண்டு வந்துள்ள, பாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்‍க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்‍கு அளிக்‍கப்பட்ட அனுமதி தொடருமா? என்ற தெளிவு இல்லை என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார். மேலும், சரியான திருத்தங்களுடன் புதிய மசோதாவை கொண்டு வராவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளுக்‍கும் எடப்பாடி பழனிசாமி அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தரப்பினரும் சந்தேகப்பட்டதைப் போலவே, தெளிவில்லாத, 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல்' சட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்து, விவசாயிகளையும், தமிழக மக்களையும் மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி பாசனப் பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோது, 'இவர்கள், உண்மையான அக்கறையோடு செயல்படுத்துவார்களா?' என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்பட்டது - ஏனெனில், மீத்தேன், ஹைட்ரோகார்பன், விவசாய நிலங்களில் கெய்ல் எரிவாயுக் குழாய் பதித்தல் உள்ளிட்ட, விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும், புரட்சித் தலைவி அம்மா, தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்தார் - ஆனால், கடந்த மூன்றாண்டுகளில், அவற்றையெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து இங்கே செயல்படுத்தியது பழனிசாமி அரசு - வார்த்தைக்கு வார்த்தை, தானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே, இத்திட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளையும், செயல்பாட்டாளர்களையும், சமூக விரோதிகளைப் போல, தீவிரவாதிகளைப் போல, விரட்டி விரட்டி வழக்குகள் போட்டு கைது செய்ததும் இதே எடப்பாடி பழனிசாமிதான் - இப்போது, தேர்தல் நெருங்குகிறது என்பதால், இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போலவே, இதிலும் நடந்துகொள்வார்களோ? என்ற அச்சமும் மக்களிடம் இருந்தது - நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதா, திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை, பல மாதங்களுக்குப் பின்னர், மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் வரை மூடிமறைத்து, தமிழக மாணவ-மாணவியரையும், பெற்றோரையும் வஞ்சித்த துரோக வரலாறு பழனிசாமி அன்ட் கம்பெணிக்கு இருப்பதால், இந்த சந்தேகம் ஏற்பட்டது - இப்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இந்த சந்தேகங்கள் எல்லாம் உறுதியாகி, வழக்கம்போலவே, இவர்கள், தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது - வேளாண் மண்டலத்திற்கான அறிவிப்பை, சேலத்தில் வெளியிட்டபோது, எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்த அரியலூர், திருச்சி, கரூர் மாவட்டப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்குள், சட்டமசோதாவின் முதலாம் இணைப்பு பட்டியலில் கொண்டுவரப்படவில்லை என்று திரு. டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எல்லாவற்றையும்விட பெரிய தீமையாக, 'இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர், காவிரிப் பாசனப் பகுதியில் செயல்பாட்டில் உள்ள செயல்கள், திட்டங்களை புதிய சட்டம் பாதிக்காது' என்று மேம்போக்காக குறிப்பிடப்பட்டுள்ளது - இதில், செயல்கள், திட்டங்கள் என்பதற்கு சரியான வரையறை அளிக்கப்படவில்லை - அப்படியானால், காவிரிப் பாசன மாவட்டங்களில் தற்போது, ஓ.என்.ஜி.சி., செயல்படுத்திவரும் 152 எண்ணெய்க் கிணறுகள் அப்படியே தொடர இருக்கின்றனவா? - கடந்த ஆண்டு, காவிரிப் படுகைப் பகுதிகளை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து, 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதி தொடருமா? இல்லையா? என்ற தெளிவும் இந்தச் சட்டத்தில் இல்லை;

ஏனெனில், இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் ஆய்வுப் பணிகள் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது - அந்தத் திட்டங்கள் தொடருமானால், இப்படியொரு சட்டம் கொண்டுவந்து எந்தப் பயனும் இல்லை - விவசாயிகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இல்லாமல், அவர்களை தந்திரமாக ஏமாற்றுவதற்கான உத்தியாகவே, இந்தச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்திருப்பதாக சந்தேகம் எழுகின்றது - இதுதொடர்பாக, உரிய விளக்கமளித்து, சரியான திருத்தங்களுடன், புதிய மசோதாவை சட்டப்பேரவையில் கொண்டுவராவிட்டால், எடப்பாடி பழனிசாமி அன்ட் கம்பெனி, தங்களுக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டதாகவே ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் கருதுவார்கள் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00