குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேலும் வலுக்‍கிறது எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

Feb 26 2020 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டதைக்‍ கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்‍கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக்‍ கண்டித்து சென்னையில் SDPI கட்சி சார்பில், கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள மத்திய தலைமை அஞ்சல் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய பா.ஜ.க. அரசைக்‍ கண்டித்தும், டெல்லி காவல்துறையைக்‍ கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை பல்லாவரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்‍கள் பங்கேற்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றக்‍ கோரியும் மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் 12வது நாளாக இரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை முன்பாக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கையில் செல்போன் டார்ச் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், டெல்லி காவல்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்‍கள் உயிரிழந்ததைக்‍ கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கோஷங்கள் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் கலவரத்தை தூண்டிய கும்பலை கைது செய்யக்‍கோரியும், கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இஸ்லாமியப் பெண்களும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00