தமிழகத்தில் கொரோனா வைரசுக்‍கு முதல் உயிரிழப்பு - மதுரையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் பலி

Mar 25 2020 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவானது.

மதுரை அண்ணாநகர், கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த 54 வயது நபருக்‍கு, கொரோனா தொற்று அறிகுறி உறுதியானதை அடுத்து, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வெளிநாடுகளில் இருந்த வந்த தனது நண்பர்களை சந்தித்ததுடன், அவர்களிடம் இருந்து பொருட்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சர்க்‍கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னையால் ஏற்கனவே பாதிக்‍கப்பட்ட அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தாக்‍கி முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடல் முழுவதும் பாதுகாப்பாக உறையிடப்பட்டு வைரஸ் தொற்று பரவாத வகையில், உரிய மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட்டது. முழு மருத்துவ பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டு, அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் புதைக்கப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00