யுகாதி புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்து

Mar 25 2020 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
யுகாதி புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டில், உலக மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் நல் வாழ்த்துச் செய்தியில், வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரமும், பண்பாடும் இணைந்து, உலகிற்கே ஒற்றுமையின் அடையாளமாக திகழும் தேசம், நம்முடைய இந்திய தேசம் - அதிலும், எல்லோரையும் அரவணைப்பதில் தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவே திகழ்கிறது - நம்முடைய புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா, இந்த மண்ணில் வசிக்கின்ற அனைவரையும் சகோதர சகோதரிகளாகக் கருதி, அன்பு பாராட்டியதை நினைவுகூர்ந்துள்ள திரு. டிடிவி தினகரன், மாண்புமிகு அம்மா வழியில், அவரது திருப்பெயரைத் தாங்கியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அதே வழியில் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டு காலமாக தமிழக மக்களோடு இரண்டறக் கலந்து, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, தமிழகத்தில் கல்வி, கலை, தொழில், வணிகம் உள்ளிட்டவற்றில் பெரும் பங்களிப்பை செலுத்தி வருகிற, தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு யுகாதி புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவியட்டும் - ஆரோக்கியமும், அன்பும் நிறையட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துவதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தாண்டில், உலக மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட, அவரவர் இல்லங்களிலிருந்து, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00