தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - மார்ச் 24-ம் தேதி ப்ளஸ்டூ தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வுநாள் பின்னர் அறிவிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Mar 25 2020 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தேநீர்க் கடைகள், மாலை 6 மணி முதல், மறு அறிவிப்பு வரும்வரை மூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், முதலமைச்சர் தலைமையில், அது தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல், 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ப்ளஸ்டூ பொதுத்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, மாநிலம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்குவதற்கு இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00