கொரோனா எதிரொலியாக நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகளின் ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் உணவுக்கு தவித்து வரும் நிலை குறித்து டிடிவி தினகரன் கவலை - உதவுதற்கான முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்ய வலியுறுத்தல்

Mar 27 2020 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதிப்பு எதிரொலியாக நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகளின் ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் உணவுக்கு தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவுதற்கான முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சரக்கு லாரிகளில் சென்ற ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுவதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00