வாகனங்களை தணிக்கை செய்து அனுப்பும் காவலர்கள் : 90% மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக காவலர்கள் தகவல்

Mar 27 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சத்தை தவிர்த்து போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வாகனங்களை அனுமதிக்கும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூர் பகுதியில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பணியாளர்கள் வாகனங்களில் செல்வதும், மருத்துவமனை, மருந்துகள் வாங்குவதற்காக பொதுமக்கள் செல்வதற்கும் போக்குவரத்து காவலர்கள் அனுமதித்து வருகின்றனர். அனைத்து வாகனங்களையும் நிறுத்தி என்ன தேவைக்காக செல்கின்றனர் என்பது குறித்து ஒவ்வொருவரையும் விசாரித்து அனுப்புவதாக போக்குவரத்து காவலர் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே அத்தியாவசியமின்றி சுற்றிய இளைஞர்களின் வாகனங்களை பிடித்து வைத்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அதேநேரத்தில் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே மருத்துவமனைக்காக வந்த வாகனத்தை பிடித்து வைத்து, வயதான பெண்மணியையும் அவருடைய பேரனையும் அனுப்பிவிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஊரடங்கை மீறி வெளியே நடமாடிய 30-க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, கொரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், ஏராளமானோர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை கண்டித்த போலீசார், 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், 144 தடை உத்தரவை மீறி வெளியே நடமாடடியவர்களை கண்டித்த போலீசார், தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை வழங்கினர். இருசக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்களையும், தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கண்டித்து வீட்டிற்கு அனுபினர். வெளியூரிலிருந்து கொடைக்கானலுக்கு வருகை தந்த பயணிகளுக்கு, கொரோனா பாதிப்பு குறித்து எடுத்துரைத்த போலீசார், அவர்களை திருப்பி அனுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00