திண்டுக்கல்லில் மாவட்டத்தில் தடையை மீறியதாக 281 வழக்குகள் பதிவு - நீலகிரி மாவட்டத்தில் 212 பேர் மீது வழக்குப்பதிவு

Mar 28 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றித் திரிந்தவர்கள் மீது, போலீசார் வழக்‍குப்பதிவு செய்ததுடன், இருசக்‍கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்‍கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய பாதசாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், ஒரே இடத்தில் கூட்டம் கூடியவர்கள் என மொத்தம் 404 நபர்கள் மீது 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 284 இருசக்கர வாகனங்களும், 9 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 212 பேர் வழக்குப்பதிவு செய்ய பட்டுள்ளது. மேலும், அத்துமீறி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், கூட்டம் கூட்டமாக கிரிக்கெட் விளையாடிவர்கள் என ​கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். கொரோனா வைரஸ் குறித்த ஆபத்தை, இளைஞர்களிடமும் பொதுமக்களிடமும் எடுத்துக்‍கூறி, போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார், கிராமம் கிராமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வீட்டிற்குள் விரட்டியதுடன், கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்‍களிடம் ஏற்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00