கொரோனாவை விரட்ட இயற்கை முறையில் சுகாதாரத்தை பேணும் மக்கள் - குடியிருப்புகளில் மஞ்சள் கலந்த நீரை தெளிக்கும் சமூக ஆர்வலர்கள்

Mar 28 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள், இயற்கை முறையில் சுகாதாரத்தை பேணிக்காத்து, கொரோனாவை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அருகேயள்ள நாவலூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளின் முன்பு, சாணம் தெளித்து, மஞ்சள் தண்ணீர், வேப்பிலை, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து, வீடுகளில் தெளித்து, சுகாதாரத்தை பேணுகின்றனர். கொரோனோவிற்கு எதிராகவும், அதில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், வீட்டு வாசலில், விழிப்புணர்வு வாசகங்களை கோலமாக வரைந்து வைத்துள்ளனர். மேலும், இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரித்து, கிராமத்தில் உள்ள வீதிகள், பொதுஇடங்களில், தெளித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் களத்துமேடு குடியிருப்புகளில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள், மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து வருகின்றனர். மஞ்சள் கலந்த நீர், கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதால், கொரோனாவை தடுக்க, இவ்வாறு செய்து வருகின்றனர்.

இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில், தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்கள், கிருமி நாசினிக்கு பதில், மஞ்சள் கலந்த நீரை தெளித்து வருகின்றனர். போக்குவரத்து சேவை முடங்கிக்கிடப்பதால், பொதுச்சேவையில் ஈடுபட்டு வருவதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00