விழுப்புரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று : டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றதாக தகவல்

Mar 31 2020 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரில், 3 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா சிறப்பு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ரத்த பரிசோதனைகளின் முடிவில் மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் விழுப்புரத்திலுள்ள முத்தோப்பு, கமலா நகர் மற்றும் வாசு நகரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூன்று பேரும், கடந்த மாதம் டெல்லியில் நடைப்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00