விமானங்கள் ரத்தானதால் இந்தியாவிலேயே தங்கிய ஜெர்மன் பயணிகள் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் சென்றனர்

Mar 31 2020 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவிலேயே தங்கியிருந்த 350 ஜெர்மன் நாட்டு பயணிகள், சிறப்பு விமானம் மூலம் ஜெர்மன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜெர்மனியில் இருந்து சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வந்திருந்த 350 பயணிகள், கொரோனா அச்சம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களை ஜெர்மன் அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்ட இங்குள்ள ஜெர்மன் தூதரக அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் Frankfurt அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி மும்பையிலிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு தனி விமானம் காலை 6 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தது. சென்னையிலிருந்த 159 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு, ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கேயுள்ள பயணிகளையும் அழைத்துக்கொண்டு, ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஜெர்மன் செல்லவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00