பொதுமக்கள் வைப்பு நிதி, சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கக்கூடாது : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

Apr 1 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுமக்‍கள் வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களுக்‍கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்‍கும் தருணம் தவறானது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

திரு. சிதம்பரம் இன்று ட்விட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுமக்‍கள் வைப்பு நிதி, என்.என்.சி., எஸ்.சி.எஸ்.எஸ். மற்றும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்‍க மத்திய அரசு எடுத்துள்ள முடிவு, தொழில்நுட்ப ரீதியாக சரியானதாக இருந்தாலும், இந்த முடிவு எடுக்‍கப்படும் தருணம் முற்றிலும் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.

இக்‍கட்டான நேரத்தில் மக்‍கள் தங்களுடைய சேமிப்பை சார்ந்திருப்பதாக சுட்டிக்‍காட்டியுள்ள திரு. சிதம்பரம், பழைய விதிமுறைகளை ஜுன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்‍ககலாம் என மத்திய அரசை கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலான காலாண்டிற்கு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்‍கான வட்டி விகிதம் குறைக்‍கப்படுவதாக மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00