பிரதமர் மோதியின் வேண்டுகோளை கடைபிடித்த தமிழக மக்கள் : கொரோனாவிற்கு எதிராக ஒற்றுமையுடன் ஒளியேற்றினர் - 9 நிமிடங்கள் செல்போன்களை ஒளிரச்செய்த இளைஞர்கள்

Apr 6 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. மோதியின் வேண்டுகோளை ஏற்று, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

சென்னை வடபழநி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், அடுக்‍குமாடி குடியிருப்புகளில் மக்‍கள் மின்விளக்‍குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்‍குகள் ஏற்றியும், டார்ச் லைட், செல்ஃபோன் விளக்‍குகளை ஒளிர விட்டும், ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

வட சென்னையின் முக்கிய பகுதிகளான திருவொற்றியூர் ,மணலி, எண்ணூர், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றியும், மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி , செல்போன் டார்ச் வைத்து ஒளி ஏற்றினர்.

கொரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒற்றுமையாக உள்ளதை உணர்த்தும் விதமாக, அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு நின்று விளக்கு ஏற்றியும், டார்ச்லைட் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதேபோல மாவட்டத்தில் உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் விளக்கேற்றினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ராஜகோபுரம் முன்பு அகல் விளக்குகளை ஏற்றிய மக்கள், சமூக இடைவெளி விட்டு நின்று டார்ச்லைட் மற்றும் செல்போன் லைட் அடித்து ஒற்றுமையை கடைபிடித்தனர். இதே போல ஸ்ரீரங்கம், தில்லை நகர், உறையூர், திருவானைக்காவல், புறநகர் பகுதிகளான மணப்பாறை, வையம்பட்டி, லால்குடி, முசிறி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் சரியாக இரவு 9 மணிக்கு வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி, டார்ச்லைட் போன்றவற்றை கொண்டு ஒளியேற்றினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மக்கள் வீடுகளில் மின் விளக்குகளை அனைத்து அகல் விளக்கு, டார்ச் லைட் மற்றும் மொபைல் போனின் ஒளியை ஏந்தி நின்றனர்.

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அகல் விளக்குகள் ஏற்றியும் டார்ச் லைட், மற்றும் செல்போன் லைட் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் 9 நிமிடம் தொடர்ச்சியாக ஒளிர விட்டனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் வசித்த பொதுமக்கள் மாடிகளில் நின்று வானில் ஒளிர்ந்த நிலவை ரசித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், வடலூர், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல்விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இதுபோல் மயிலாடுதுறை அடுத்த தருமபுர ஆதீன மடத்தில் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மடத்தின் நுழைவாயில் துவங்கி, கோபுர மாடங்கள் வரையில், ஆயிரத்து எட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன. ஓம் மற்றும் சிவலிங்க வடிவங்களில் பிரம்மாண்டமான முறையில் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆதீனத்தின் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி. நரிக்குடி, சாத்தூர், உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அனைத்தும் வீட் முன் விளக்கு ஏற்றியும் மொட்டை மாடியில் நின்று டார்ச் லைட்டை ஒளிரவிட்டும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தேச ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல்லில் பொதுமக்கள் திண்டுக்கல் மாநகரில் பொதுமக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடி மீது நின்று செல்போன் விளக்கு உள்ளிட்டவற்றை ஒளிரச் செய்தனர்.

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அனைத்து வீடுகள் முன்பாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் , இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அகல்விளக்குகளை ஏற்றியும், மாடிகளில் இருந்து டார்ச், மொபைல் டார்ச் ஆகியவற்றை பயன்படுத்தி ஒளிகளை ஒளிர செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம். மேலக்கோட்டையூர். மதுராந்தகம். திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00