தமிழகத்தில் ஊரடங்கை மீறுவோர் மீது தொடரும் நடவடிக்கை - நூதன தண்டனைகள் இருந்தும் குறையாத மக்கள் நடமாட்டம்

Apr 6 2020 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, தோப்புக்கரணம் போட வைப்பது என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவது தொடர்ந்து நீடிக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக உலா வந்த வண்ணம் உள்ளனர். இதுபோன்ற வாகன ஓட்டிகளுக்கு தோப்புக்கரணம் போடுவது, தண்டல் எடுப்பது, ஒற்றைக்காலில் நிற்க வைப்பது போன்ற தண்டனைகளை காவல்துறையினர் அளித்து வருகின்றனர். போதிய ஆவணம், அனுமதி கடிதம் இல்லாமல் இல்லாமல் இருப்போர் மீது வழக்கும் பதிவும் செய்யபடுகிறது. சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவசியமின்றி வருபவர்கள் மீது வழக்குபதிவு செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவை மீறி அலட்சியமாக வாகனத்தில் வெளியே சுற்றியது தொடர்பாக ஆயிரத்து 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆயிரத்து 372 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், ஆயிரத்து 37 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக கடந்த 7 நாட்களில் 895 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 760 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00