தமிழகத்தில் தட்டச்சு நிலையங்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உரிமையாளர்கள் கோரிக்கை

May 26 2020 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மற்ற துறைகளை போன்றே தட்டச்சு நிலையங்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சுமார் 3 ஆயிரத்து 500 தட்டச்சு பயிலகங்கள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால், வாடகை மற்றும் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூட வழியில்லாமல் தாங்கள் அவதிப்பட்டு வருவதாக அவற்றின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தட்டச்சு பயிலகங்களை திறப்பதற்கு அனுமதியளிக்க கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அரசுக்கு தொடர்ந்து மனு அளித்து வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர். அனைத்து துறையினருக்கும் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி வரும் இந்த நேரத்தில், தட்டச்சு பயிலகத்திற்கும் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00