திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை - காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

May 27 2020 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில், திமுக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அண்மையில் கைது செய்யப்பட்டார். எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு, மே 31-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்யக்கோரி, மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் சரணைடையும் நாளிலேயே ஜாமின் மனுவை பரிசீலிக்க கோரி, கைதுக்கு முன்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00