2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் எழுந்த முறைகேடு புகார் - 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்‍கை

May 27 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் 2 ஆயிரம் பேர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 200 பேர் லஞ்சம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது. இதுதொடர்பான விசாரணையில், தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2017-ல் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், லஞ்சம் கொடுத்து கூடுதலாக மதிப்பெண் பெற்று, முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00